நியூசிலாந்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இமாலய வெற்றி!
11 தை 2025 சனி 13:20 | பார்வைகள் : 220
நியூசிலாந்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி நிசங்கா (66), குசால் மெண்டிஸ் (54) மற்றும் லியானகே (53) ஆகியோரின் அரைசதம் மூலம் 290 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பிரேஸ்வெல் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லியானகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அணித்தலைவர் சாண்ட்னர் 2 ஓட்டங்களில் தீக்ஷணா ஓவரில் அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்க் சாப்மேன் (Mark Chapman) தனியாளாக போராடினார்.
எனினும் இலங்கை பந்துவீச்சாளர்கள் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நியூசிலாந்து அணி 29.4 ஓவரில் 150 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை அணி 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த சாப்மேன் 81 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கையின் அசிதா பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷணா மற்றும் இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளும், லியானகே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அசிதா பெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதும், மேட் ஹென்றி தொடர் நாயகன் விருதும் வென்றனர்.