14 ஆம் திகதி சீனா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர
11 தை 2025 சனி 15:58 | பார்வைகள் : 11340
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நான்கு நாள் விஜயமாக சீனா செல்லவுள்ளார்
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு செல்கிறார்.
மேலும், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி,சீனப் பிரதமர் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது


























Bons Plans
Annuaire
Scan