ஸ்பெயின் ஜனாதிபதியின் காணாமல் போன துப்பாக்கி... Seine-et-Marne நகரில் மீட்பு!!
11 தை 2025 சனி 18:32 | பார்வைகள் : 622
ஸ்பெயின் ஜனாதிபதி ஒருவருக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்று காணாமல் போன நிலையில், Seine-et-Marne நகரில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஆயுதங்கள் சேகரிப்பாளர் எனவும், அவரிடம் இருந்து பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கி பல மில்லியன் பெறுமதியான ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட துப்பாக்கி எனவும், அது ஸ்பெயினின் இரண்டாம் குடியரசு ஜனாதிபதி Niceto Alcalá-Zamora இற்கு சொந்தமானது எனவும், அது காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனையே Seine-et-Marne மாவட்ட காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.