Paristamil Navigation Paristamil advert login

Strasbourg : இரண்டு ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்றுடன் மோதி கோர விபத்து.. ஐம்பது பேர் வரை காயம்!

Strasbourg : இரண்டு ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்றுடன் மோதி கோர விபத்து.. ஐம்பது பேர் வரை காயம்!

12 தை 2025 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 2075


இரண்டு ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஐம்பது பேர் வரை காயமடைந்துள்ளனர். Strasbourg (Bas-Rhin) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று ஜனவரி 11 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் Strasbourg நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ட்ராம் ஒன்றுடன், மற்றொரு ட்ராம் மோதியுள்ளது. இரண்டு ட்ராம்களையும் சேர்ந்து 100 பேர் வரை அதில் இருந்ததாகவும், அவர்களில் 50 பேர் காயமடைந்ததாகவு, அவர்களில் சிலர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமிக்ஞை கட்டுப்பாட்டில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ட்ராம் நின்றிருந்த பாதையில் மற்றொரு ட்ராம் திரும்பியதாகவும், அதை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏராளமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். ஸ்ராஸ்பேக் நகரபிதா Jeanne Barseghian சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டார்.

விபத்தை அடுத்து, சுரங்கத்தில் இருந்து பெரும் கரும்புகை எழுந்ததுடன், பயணிகள் பரபரப்பாக அங்கும் இங்குமாக ஓடித்தியும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.


 

எழுத்துரு விளம்பரங்கள்