Paristamil Navigation Paristamil advert login

Villeneuve-Saint-Georges : மருத்துவமனை அவசரப்பிரிவில் 26 வயது பெண் பலி.. விசாரணைகள் ஆரம்பம்!!

Villeneuve-Saint-Georges : மருத்துவமனை அவசரப்பிரிவில் 26 வயது பெண் பலி.. விசாரணைகள் ஆரம்பம்!!

12 தை 2025 ஞாயிறு 09:14 | பார்வைகள் : 2615


மருத்துவமனை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

பரிசின் தென்கிழக்கில் அமைந்துள்ள நகரமான Villeneuve-Saint-Georges இல் உள்ள Centre hospitalier intercommunal de Villeneuve-Saint-Georges மருத்துவமனையில், ஜனவரி 10 ஆம் திகதி 10 வெள்ளிக்கிழமை குறித்த பெண் நோயாளி உயிரிழந்துள்ளார். அவரது மறைவில் சந்தேகம் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அரச வழக்கறிஞர் அலுவலகம் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை முழு உடற்கூறு பரிசோதனைகளுக்கு உட்படுத்த பணிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்