மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கடைபிக்க வேண்டிய விடயங்கள்
12 தை 2025 ஞாயிறு 09:56 | பார்வைகள் : 288
இந்து பாரம்பரியத்தின் படி, மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, கணவன் சில விடயங்களை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி மனைவி கணவன் தன் விருப்பப்படி நடக்க வேண்டும். அவள் எதை விரும்புகிறாள் என்பதைக் கண்டுபிடித்து அதை கணவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்..
மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நமது இந்து மரபுகளில் கணவன் செய்யக்கூடாத சில சடங்குகள் உள்ளன. அவை என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
கர்ப்பிணிப் பெண்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது கணவனின் முக்கிய கடமையாகும். அப்படிச் செய்தால் நீண்ட ஆயுள் கொண்ட மகன் அல்லது மகள் பிறக்கும் என்பது ஐதீகம்.. மனைவியின் விருப்பம் நிறைவேறவில்லை என்றால் கணவருக்கு குற்ற உணர்வு ஏற்படும். அதனால் மனைவியின் கர்ப்ப காலம் முழுவதும் அவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதே நல்லது.
மனைவி கர்ப்பத்தின் போது கணவன் செய்யக்கூடாதவைகள்..
1. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது மரம் வெட்டுவது, கடலில் குளிப்பது போன்றவற்றை கணவன் செய்யக்கூடாது.
2. மேலும் கணவன் மொட்டையடிக்கக் கூடாது. அதுமட்டுமல்லாமல் மனைவி கர்ப்பமாகி 6 மாதங்களுக்கு பிறகு கணவன் ஷேவ் கூட செய்யக்கூடாது.
3. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் பிணத்தை சுமந்து செல்வது கூடாது.
4. வெளிநாட்டு பயணங்கள்செல்லக்கூடாது.. ஆம் மனைவி கருவுற்ற பிறகு வெளியூர் பயணம் செய்வது, மனைவியை விட்டு வெளியேறுவது போன்ற விஷயங்களை அறவே செய்யக்கூடாது.
5. தன் மனைவி கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து, கணவன் மொட்டையடித்தல், புனித யாத்திரை செல்லுதல் படகோட்டம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
6. க்ருஹாரம் அல்லது வாஸ்துகர்மா செய்ய வேண்டாம். மலை ஏறுதல், சண்டை போடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு சம்ப முகூர்த்தமோ, க்ருஹராம்பமோ, வாஸ்துகர்மாவோ செய்யக்கூடாது. இந்த செயல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.
7. மேலும் இறந்த உடலைப் பின்தொடர வேண்டாம். மரங்களில் இருந்து முழுமையாக பழுக்காத பழங்கள் மற்றும் முழுமையாக பூக்காத பூக்களை பறிக்க கூடாது.
8. அடிக்கல் நாட்டுதல், புது வீட்டிற்கு செல்லுதல் போன்ற நிகழ்வுகளையும் தவிர்க்க வேண்டும்.
இதெல்லாம் ஒவ்வொரு கணவனும் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.. இன்றும் கிராமங்களில் இந்த விஷயங்களை கணவன்மார்கள் கடைபிடித்து வருகின்றனர்.. இது பந்தத்தை வலுப்படுத்தும் ஆரோக்கியமான வழிகள்.
இது மட்டுமின்றி பெரியோர்கள் கடைபிடிக்கச் சொல்லும் விதிகள், கொண்டாடப்படும் சடங்குகள், பண்டிகைகளின் போது கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு பின்னால் பல காரணங்கள் மறைந்து இருக்கிறது. அதனால் இதை ஃபாலோ பண்ணுங்கள்.. பலன்களை பெறுங்கள்.