Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்ப் பெண்...

கனடாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்ப் பெண்...

12 தை 2025 ஞாயிறு 10:34 | பார்வைகள் : 5899


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது அடுத்தக்கட்டமாக பிரதமர் பதவிக்கு இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர். 

லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே அடுத்த பிரதமர் ஆவார் என்பதால் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் பிறந்து கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள லிபரல் கட்சியை சேர்ந்த சந்திரா ஆர்யா அந்த கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பிரதமர் போட்டிக்கு மற்றுமொரு இந்தியப் பெண் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவை வெள்ளலூரை பூர்வீகமாக அனிதா இந்திரா என்பவர் போட்டியிடவுள்ளார்.

அனிதா இந்திராவின் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் ஆவார். 

இவர் காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஆவார்.

அனிதா இந்திராவை பொறுத்தவரை, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு வர்த்தக மந்திரியாக பணியாற்றியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்