பிக்பாஷ் லீக் 90 ஓட்டங்கள் விளாசி அணியை காப்பாற்றிய மேக்ஸ்வெல்
12 தை 2025 ஞாயிறு 12:07 | பார்வைகள் : 161
பிக்பாஷ் லீக் போட்டியில் க்ளென் மேக்ஸ்வெல், 52 பந்துகளில் 90 ஓட்டங்கள் விளாசி மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.
டாக்லேண்ட்ஸ் மைதானத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
ரெனெகேட்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் துடுப்பாடியது.
சாம் ஹர்பர் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். அடுத்து டக்கெட் 21 ஓட்டங்களிலும், தாமஸ் பிரேசர் ரன் எடுக்காமலும் ஓ நீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய பியூ வெப்ஸ்டர் 15 ஓட்டங்கள் எடுத்தும், அணித்தலைவர் ஸ்டோய்னிஸ் முதல் பந்திலும் அவுட் ஆகி வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து கார்ட்ரைட் (6), ஜோயல் பாரிஸ் (3) ஆகியோரும் ஆட்டமிழக்க, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 75 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என தடுமாறியது.
அப்போது சிக்ஸர் மழைபொழிய தொடங்கிய க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 165 ஓட்டங்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 52 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் விளாசினார்.