Paristamil Navigation Paristamil advert login

157 பந்தில் 346 ரன் விளாசிய 14 வயது வீராங்கனை! WPLயில் நிராகரிக்கப்பட்ட சிறுமி சரித்திர சாதனை

157 பந்தில் 346 ரன் விளாசிய 14 வயது வீராங்கனை! WPLயில் நிராகரிக்கப்பட்ட சிறுமி சரித்திர சாதனை

12 தை 2025 ஞாயிறு 12:08 | பார்வைகள் : 154


U19 மகளிர் ஒருநாள் போட்டியில் மும்பை வீராங்கனை இரா ஜாதவ் முச்சதம் விளாசி சாதனை படைத்தார். 

19 வயதிற்குட்பட்ட மகளிர் ஒருநாள் தொடர் போட்டியில் மேகாலயா மற்றும் மும்பை அணிகள் மோதின.

இதில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 563 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் 14 வயது வீராங்கனையான இரா ஜாதவ் (Ira Jadhav) சிக்ஸர் மழை பொழிந்து முச்சதம் விளாசி மந்தனாவின் (224) சாதனையை முறியடித்தார்.


157 பந்துகளை எதிர்கொண்ட இரா, 16 சிக்ஸர்கள் மற்றும் 42 பவுண்டரிகளுடன் 346 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 220 ஆகும். 

U19 மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய முதல் வீராங்கனை எனும் புதிய சரித்திரம் படைத்துள்ளார் இவர். 

இதற்கு முன்பு ஸ்மிரிதி மந்தனா 224 ஓட்டங்களும், ராக்வி பிஸ்ட் 219 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 202 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

மகளிர் பிரீமியர் லீக்கில் இரா ஜாதவிற்கு அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. தற்போது அவர் புதிய சரித்திரமே படைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்