கிரிப்டோகரன்ஸியின் பெயரில் மோசடி.. ஆறு பேர் கைது!!
12 தை 2025 ஞாயிறு 12:46 | பார்வைகள் : 1408
கிரிப்டோகரன்ஸி (cryptocurrency) பெயரில் மோசடி செய்த ஆறுபேர் கொண்ட கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிரிப்டோகரன்ஸியில் முதலிடுங்கள் என சொல்லி ஏமாற்றி போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, €1.2 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட இல் து பிரான்சின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட மோசடிக்கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் சேபியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடம் இருந்து போலி வங்கி ஆவணங்கள், அச்சு இயந்திரங்கள், பணம், துப்பாக்கி, அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கைபற்றப்பட்டுள்ளன.