சென்ற ஆண்டு 66,000 நிறுவனங்கள் வங்கரோத்து நிலையை அடைந்தன!!

12 தை 2025 ஞாயிறு 13:55 | பார்வைகள் : 10519
சென்ற 2023 ஆம் ஆண்டில் மட்டும் சிறிய மற்றும் பெரிய 66,000 நிறுவனங்கள் பெரும் நஷ்ட்டங்களை அடைந்து வங்கரோத்து நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்களின் கண்காணிப்பாளர்களான "BPCE l'Observatoire" நிறுவனம் வெளியிட்ட சென்ற ஆண்டுக்கான அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. 66,000 நிறுவனங்கள் முதலை இழந்து நஷ்ட்டமடைந்ததாகவும், 260,000 பேர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28% சதவீதம் அதிகமாகும்.
இதில் பெரிதளவில் பாதிக்கப்பட்டது நடுத்தர அளவிலான நிறுவனங்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025