Paristamil Navigation Paristamil advert login

விக்ரமின் ‛வீர தீர சூரன்' பின்வாங்குகிறதா?

 விக்ரமின் ‛வீர தீர சூரன்' பின்வாங்குகிறதா?

12 தை 2025 ஞாயிறு 14:01 | பார்வைகள் : 342


அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‛வீர தீர சூரன்'. இப்படத்தில் அவருடன் துஷாரா விஜயன், எஸ். ஜே .சூர்யா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் நிலையில், அப்படம் ஜனவரி மாதம் 30ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜனவரி இறுதியில் அஜித்தின் ‛விடாமுயற்சி' திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால், இந்த வீர தீர சூரன் படத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்