Paristamil Navigation Paristamil advert login

€40,000 யூரோக்களுக்கு செனட் சபைக்கு இரு இருக்கைகள்.. புதிய சர்ச்சை!!

€40,000 யூரோக்களுக்கு செனட் சபைக்கு இரு இருக்கைகள்.. புதிய சர்ச்சை!!

12 தை 2025 ஞாயிறு 16:52 | பார்வைகள் : 1838


செனட் சபைக்கு வாங்கப்பட்ட  இரு கதிரைகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

செனட் சபையின் சபாநாயகருக்கு இக்கதிரைகள் வாங்கப்பட்டதாகவும், கதிரை ஒன்றின் பெறுமதி €40,000 யூரோக்கள் எனவும் Canard enchaîné ஊடகம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டு இணையவெளியில் பெரும் விமர்சனங்களை சந்தித்திருந்தது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டினை செனட் மேற்சபையின் தலைவர்  Gérard Larcher மறுத்துள்ளார்.

கதிரைகள் வாங்கப்பட்டது உண்மை எனவும், இது கதிரைகளும் சேர்த்து €36,000 யூரோக்கள் எனவும், அதற்குரிய செலவீனம் வரவுவைக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

எழுத்துரு விளம்பரங்கள்