ஈஃபிள் கோபுரத்தில் சைக்கிள் ஓட்டியவர்!!
25 சித்திரை 2018 புதன் 12:30 | பார்வைகள் : 19003
ஈஃபிள் கோபுரத்தில் சைக்கிள் ஓட்டினால் எப்படி இருக்கும்...?? சர்கஸ்சில் வேலைபார்ப்பவருக்கு இதுபோன்ற ஐடியாக்கள் தோன்றலாம்... ஒரு இசையமைப்பாளருக்கு தோன்றலாமோ...??
Pierre Labric, பிரான்சின் மிக பிரபலமான இசையமைப்பார். பல்வேறு பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார்.
திடீரென அவருக்கு இது போன்ற யோசனை எப்படி தோன்றியது என தெரியவில்லை..., 1923 ஆம் வருடத்தின் ஒரு நாளில்..., ஈஃபிள் கோபுரத்தை காண நின்றிருந்த கூட்டத்தின் மத்தியில்... கோபுரத்தின் முதலாவது தளத்தில் இருந்து சைக்கிள் மூலம் படிக்கட்டுக்களில் 'கட கட' என இறங்கினார்.
கூட்டத்தினர் இந்த வினோத செயலை ஆச்சரியமாக பார்த்தனர். 'எங்களுக்கு சொல்லாமல் எதோ சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள் போலும்!' என மக்கள் நினைக்க, கீழே இறங்கிய Pierre Labric ஐ காவல்துறையினர் கைது செய்தனர். 'அப்படி இல்லை போல!' என மக்கள் தலையில் கை வைத்துக்கொண்டனர்.
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினரிடம் அவர் எதுவும் பெரிதாக குறிப்பிடவில்லை. தன் நண்பர் ஒருவருடன் பந்தையம் போட்டுக்கொண்டதாகவும், அதில் தாம் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.
கூட்டத்தில் நின்றிருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் 'க்ளிக்'கிய புகைப்படம் தற்போதும் இணையத்தில் உள்ளது.
ஏம்பா போலீஸ்... அவர் சைக்கிளோட மேல ஏறும் போது எங்கப்பா போயிருந்தீங்க..??