மருத்துவ பணியாளர்களை தாக்கும் வன்முறை கலாச்சாரம் உயர்ந்துள்ளது.
13 தை 2025 திங்கள் 10:52 | பார்வைகள் : 1256
மிகுந்த அர்ப்பணிப்பும், மனப் பழுவும் நிறைந்த மருந்து பணியாளர் அடிக்கடி நோயாளிகளால், அவர்களின் உறவினர்களால் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாவது பிரான்சில் அதிகரித்துள்ளது. அதுவும் அவசரப் பிரிவுகளில் கூடுதலான வன்முறை தாக்குதல்கள் இடம் பெறுகின்றன என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை 08/01 அன்று
Annemasse (Haute-Savoie) இல் உள்ள Pays de Savoie தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளியும், அவரது சகோதரரும் இணைந்து, 'மருத்துவ பணியாளர்களின் சிகிச்சை மிகவும் மெதுவாக இருக்கிறது' என குற்றம் சாட்டி ஏழு மருத்துவப் பணியாளர்களை தாக்கியுள்ளனர். எலும்பு முறிவுகள் ஏற்படும் அளவிற்கு அங்கு வன்முறை நடந்ததாக குறிப்பிட்ட மருத்துவமனையின் அவசரப்பிரிவு பொறுப்பான தாதியர் Alexandre De Oliveria தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் கடந்த 2020 இல் 955 ஆக பதிவாகியுள்ளது அதேபோல் 2023 இல் 1,581 தாக்குதல்கள் நடந்தன இது 65% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் அதை விடவும் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் தாக்குதல்களில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கின்றன, காரணம்
கூடுதலான வேளைகளில் மருத்துவ பணியாளர்கள் தங்களுக்கு ஏற்படும் வன்முறை தாக்குதல்களை பதிவு செய்வது இல்லை.
இவ்வாறான வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும் நபர் குற்றம் சுமத்தப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் 75,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும். எனும் சட்ட ஒழுங்கு இருந்த பொழுதிலும் இவ்வாறான சம்பவங்கள் பிரான்சில் அதிகரித்து வருவது சரியான நடவடிக்கைகள் காவல்துறையினரால் எடுக்கப்படாமையே காரணம் என்று மருத்துவர் வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.