Paristamil Navigation Paristamil advert login

பரிசுக்குள் ஒரு திராட்சைத் தோட்டம்! - ஒரு சோகக்கதை!!

பரிசுக்குள் ஒரு திராட்சைத் தோட்டம்! - ஒரு சோகக்கதை!!

24 சித்திரை 2018 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 19194


பரிசுக்குள் ஒரு திராட்சைத் தோட்டம் உள்ளது.... உங்களுக்குத் தெரியுமா?? இருக்கவே இருக்காது... பரிசுக்குள் 'பார்க்கிங்' கிடைப்பதே குதிரைக் கொம்பு... இதில் திராட்சைத் தோட்டம் எல்லாம் எப்படி சாத்தியம்..?
 
அட... உண்மையைத்தான் சொல்கிறோம்.  முன்னதாக பரிசுக்குள் மாத்திரம் 8 திராட்சைத் தோட்டங்கள் இருந்ததாக பதிவேடுகள் சொல்கின்றன. 
 
ஒன்று ஒன்றாக அழிந்து, அல்லது பிரான்சின் எல்லைப்பகுதிகளுக்கு குடி பெயர்த்தப்பட்டு... இன்று ஒரே ஒரு திராட்சைத் தோட்டம் மட்டும் 19 ஆம் வட்டாரத்தில் எஞ்சி உள்ளது. 
 
இப்படி ஒரு திராட்சைத் தோட்டம் இருப்பது பரிசில் ஆண்டாண்டு காலமாக வாழும் மக்களுக்கே தெரியாது. 
 
19 ஆம் வட்டாரத்தில் உள்ள LA BUTTE BERGEYRE... இங்கு தான் உள்ள அந்த தோட்டம். பரிசின் சாதாரண நிலப்பரப்பை விட 100 மீட்டர்கள் உயரம் கொண்டது இந்த பகுதி. தோட்டத்தின் பெயர் Robert Bergeyre. 19 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ரூபி விளையாட்டு வீரரின் ஞாபகமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
 
சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த தோட்டத்தில் விளையும் திராட்சைகளை கொண்டு வருடத்துக்கு 130 போத்தல்கள் வைன் மாத்திரமே தயாரிக்கின்றார்களாம். 
 
கைதெறி நெசவை இராட்சத இயந்திரங்கள் வந்து ஒழித்தது போல்... சிறு சிறு வைன் தயாரிப்பாளர்களையும் பெரிய பண முதலை நிறுவனங்கள் சூறையாடிச் சென்றுவிடுகின்றன. 
 
இருந்தாலும், திராட்சை விளைச்சலையும், வைன் தயாரிப்பையும் இவர்கள் கைவிடாமல் தொடர்கின்றனர். 
 
அடுத்தமுறை உங்களுக்கு ஒரு வைன் போத்தல் தேவைப்பட்டால்... இந்த தோட்டத்தையும் ஒரு பார்வை பார்த்து... ஒரு வைன் போத்தலையும் வாங்கிச்செல்லுங்கள்...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்