IPL 18-வது சீசன் எப்போது, எங்கே ஆரம்பமாகின்றது...?
13 தை 2025 திங்கள் 15:52 | பார்வைகள் : 237
IPL 18-வது சீசன் எப்போது, எங்கே தொடங்குகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி வரும் 21-ஆம் திகதி கொல்கத்தாவில் நடக்கவுள்ளது.
இறுதிப் போட்டியும் அதே மைதானத்தில் மே 25-ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL2025) மூன்றாவது சீசன் பிப்ரவரி 7 முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை WPL போட்டிகள் 2 மைதானங்களுக்கு பதிலாக 4 மைதானங்களில் நடைபெறும்.
ESPN CricInfo-வின் அறிக்கையின்படி, ஐபிஎல் கமிட்டி போட்டியின் தொடக்க விவரங்களை அனைத்து உரிமையாளர்களுக்கும் அனுப்பியுள்ளது, இதனால் அவர்கள் வீரர்களுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை ஜனவரி இறுதியில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.