"pleine lune du loup" என அழைக்கப்படும் அழகிய இரவுகள்.
13 தை 2025 திங்கள் 16:37 | பார்வைகள் : 1619
இன்று இரவு 11:26 உச்சத்தில் இருக்கும் இந்த ஜனவரி நிலவை நாசா "ஒரு தனித்தன்மை வாய்ந்த நிலவு" என குறிப்பிடும் போது பாரம்பரிய விவசாய மக்கள் 'ஓநாய் வெளியே வராத பற்றைக்குள் மறைந்திருந்து ஊளையிடும் இரவு' என்பதால் இதனை "pleine lune du loup" என அழைக்கின்றனர்.
வெறும் கண்களால் இப்போது முதல் பார்க்கக்கூடிய இன்றைய நிலவை முன்பு "பனி நிலவு" அல்லது "பழைய நிலவு" என்று அழைக்கப்பட்ட இன்றைய இரவு நிலவு அமெரிக்காவில் 1930 க்கு பின்னர் 'முழு ஓநாய் நிலவு' ( pleine lune du loup) என செல்லமாக அழைக்கப்படுகிறது.
நிலவுக்கும் மனிதனுக்கும் நிறைந்த காதல் உண்டு எனவே ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற முழு நிலவையும் பல்வேறுபட்ட அழகியலான பெயர்களை சூட்டி மனிதர்கள் அழைத்து வருகிறார்கள். உதாரணமாக மே மாதத்தில் வரும் நிலவை "Lune des fleurs" ( Flower Moon) என்றும், "Lune du castor".(Beaver Moon) என் நவம்பர் மாதத்தில் வரும் நிலையும் அழைக்கின்றனர்.