நெப்போலியன் காண மறந்த கட்டிடம்!!
22 சித்திரை 2018 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18485
நெப்போலியன் வளைவு என்றாலே உங்கள் அனைவருக்கும் தெரியும். சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள Arc de Triomphe தான் என.
மாமன்னன் நெப்போலியன், மற்றும் அவனது துருப்புக்கள் சேர்ந்து, Austerlitz நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் மாபெரும் வெற்றியை பெற்றார்கள். 1809 ஆம் ஆண்டு இந்த யுத்தம் இடம்பெற்றது.
வெற்றியை கொண்டாடும் முகமாகவும், உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், ஒரு நினைவு தூபியை அமைக்க நெப்போலியன் எண்ணினார்.
ரோம் நகர தேவாலயங்களின் வடிவமைப்பில் இந்த தூபி இருக்கவேண்டும் என நெப்போலியன் எண்ணினார். பின்னர் தற்போது உள்ள அதன் வடிவம் நெப்போலியனுக்கு பிடித்துக்கொண்டதும் கட்டிட வேலைகள் துரித கதியில் ஆரம்பித்தன.
ஆனால் ஆரம்பித்த வேகத்திலேயே முட்டுக்கட்டைகள் பல கிளம்பின. கட்டிட பணியில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டன. 558 வீரர்களின் பெயர்கள் இங்கு பொறிக்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கான இடமும் கட்டிடத்தில் ஒதுக்கப்பட்டது.
ஆனால் சோகம் என்னவென்றால், அந்த கட்டிடத்தின் முழுமையான தோற்றத்தைக் காண நெப்போலியனுக்கு குடுத்துவைக்கவில்லை..
கட்டிடம் 1836 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதற்கு 15 வருடங்களுக்கு முன்பாகவே, 1821 ஆம் ஆண்டு நெப்போலியன் உயிரிழந்தார்.
பின்னர் அது நெப்போலியன் வளைவு எனவும் ஆனது!!