Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

14 தை 2025 செவ்வாய் 07:45 | பார்வைகள் : 355


நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேபால, இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1200 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன என்றார். 

மேலும், அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் கடவுச்சீட்டு பெற தனி கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

அந்த கருமபீடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு விரைவாக கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜேபால தெரிவித்தார். 

எழுத்துரு விளம்பரங்கள்