லாஸ் ஏஸ்சல்ஸில் பரவ வரும் காட்டுத் தீ - அதிகரக்கும் பலி எண்ணிக்கை
14 தை 2025 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 832
அமெரிகாவில் லாஸ் ஏஸ்சலீஸையொட்டி பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளது.
மிகவும் வேகமாக பரவி அப்பகுதியை முழுவதும் சுற்றி வளைத்த தீயினால், காற்றில் அடர்புகை மற்றும் துகள் மாசுக்களும் கலந்தது. இந்நிலையில் மருத்துவ அவசர நிலை அங்கு அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1.8 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 16க்கும் மேற்பட்டவர்கள் மயங்கியுள்ளதாகவும், இன்னும் ஏராளமானவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் 12,401 வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ள நிலையில், மக்கள் இருப்பிடம் இழந்து தவித்து வருகின்றனர்.
தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ள நிலையில், தீ பரவலின் தீவிரமும் குறைந்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனாலும் இனிவரும் நாட்களில் காற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை அறிக்கை கூறியுள்ளதால், இதனை எதிர்கொள்வதற்கு அதிகாரிகள் தயாராகவே இருந்து வருகின்றனர்.