Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீதான படையெடுப்பு -- வீரர்களுக்கு பயங்கர உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின்

உக்ரைன் மீதான படையெடுப்பு -- வீரர்களுக்கு  பயங்கர உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின்

14 தை 2025 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 817


உக்ரைன் மீதான படையெடுப்பு மூன்றாண்டுகளாக நீடித்துவரும் நிலையில், தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களும் களமிறங்கியுள்ளனர். 

வெளியான தரவுகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 300 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,700 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், தங்கள் இழப்புகளை மறைக்க இறந்தவர்களின் உடல்களை எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த வீரர்கள் பிடிபடுவதைத் தடுக்க, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒரு நிபுணர் கூறியுள்ளார்.


உக்ரைன் படைகளிடம் வடகொரிய வீரர்கள் உயிருடன் சிக்காமல் இருக்கவே இந்த ரகசிய உத்தரவு என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இரு வடகொரிய வீரர்கள் சமீபத்தில் உக்ரைன் படைகளிடம் உயிருடன் சிக்கியுள்ளனர்.

அவர்களிடம் மீட்கப்பட்ட ஆவணம் ஒன்றில், அவர்கள் ரஷ்ய பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலியான ஆவணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைன் உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 9 அன்று பிடிபட்ட வட கொரிய வீரர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் Lee Seong-kwen தெரிவிக்கையில், வட கொரிய வீரர்கள் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ளும்படி கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


மட்டுமின்றி, கொல்லப்பட்ட வடகொரிய வீரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்