Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவில் 40 விவசாயிகள் சுட்டுக் கொலை!

நைஜீரியாவில் 40 விவசாயிகள் சுட்டுக் கொலை!

14 தை 2025 செவ்வாய் 09:16 | பார்வைகள் : 1440


நைஜீரியாவில் பல போராட்டக் குழுக்கள் உருவாகியுள்ளதாக அரச  தரப்பில் பல கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் ஒரு வார இறுதியில் நடந்த தாக்குதலில் குறைந்தது 40 விவசாயிகள் கொல்லப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் இஸ்லாமிய போராளிகள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் தாக்குதலில் குறைந்தது 40 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் போகோ ஹராம் தீவிரவாதிகளாலோ அல்லது இஸ்லாமிய அரசு மேற்கு ஆப்பிரிக்கா மாகாணம் (ISWAP) என்று அழைக்கப்படும் அதன் பிரிந்து சென்ற பிரிவின் உறுப்பினர்களாலோ நடத்தப்பட்டிக்கலாம் என போர்னோவின் ஆளுநர் பாபங்கா உமாரா ஜூலும் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்