பரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா?!
20 சித்திரை 2018 வெள்ளி 14:30 | பார்வைகள் : 18497
மகிழுந்து கொஞ்சம் பழையது என்றாலும்... அதில் சவாரி செய்வது ஒரு தனி பிரியம் தான். தற்போது இருக்கும் மகிழுந்துகளுடன் ஒப்பிடுகையில், 2CV மகிழுந்து 'சொஃப்ட்' குறைவு தான். இருக்கை பட்டி கூட கொஞ்சம் கரார் தான்.
இவையெல்லாவற்றையும் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்கள் என்றால், உங்களுக்கு தேவையான 'பக்கேஜ்' ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
இதில் மற்றுமொரு வசதி என்னவென்றால், சாரதி தவிர்ந்து, மகிழுந்தில் மூவர் அமரலாம். நீங்கள் தனியாக சென்றாலும், மூன்று பேராகச் சென்றாலும் கட்டணம் என்னவோ ஒன்று தான். மூன்று பேராக ட்ரிப் அடித்துவிட்டு, பணத்தை பங்குபோட்டுக்கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
மகிழுந்து பதிவு செய்யப்பட்ட 15 ஆவது நிமிடத்தில் உங்கள் இடத்துக்கு வந்துவிடும். நீங்கள் பரிசுக்குள் எங்கிருந்தாலும் சரிதான்.
உங்கள் முன்பதிவை பொறுத்து, உங்களுக்கு ஒரு 'சாம்பெயின்' ஒரு போத்தலும் எடுத்துவருவார்கள்.
மகிழுந்துக்குள் இருந்து இடங்களை சுற்றிப்பார்த்ததோடு மட்டுமில்லாமல், மகிழுந்துடன் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களிலும் பதிவேற்றலாம். இது போன்ற மகிழுந்துகளில் நீங்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் பயணித்தால் தான் உண்டு.
காலை 11 மணியில் இருந்து, இரவு 10 மணிவரை இவர்களது சேவைகள் இயங்கும்.
இணையத்தளம் ஊடாகவும், குறுந்ததகவல் ஊடாகவும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்...!!