விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்…
14 தை 2025 செவ்வாய் 13:50 | பார்வைகள் : 324
நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் கதாநாயகன், குணசித்திர வேடம், வில்லன் வேடம் ஆகிய பரிமாணங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் சினிமா துறையில் உள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி முதல் முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார் என அறிவித்துள்ளனர். அதன்படி, ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத், பவ்யா தாரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' என்கிற படத்தில் நிவாஸ் கே இசையில் "ஏதோ பேசத் தானே" என்னும் பாடலை விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதனை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார் என அறிவித்துள்ளனர்.