பரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா?!
19 சித்திரை 2018 வியாழன் 14:30 | பார்வைகள் : 18834
தினமும் வேலைக்குச் செல்லும் போது தான் பரிசை பார்க்கிறேன்... இதில் சுற்றிபார்க்க என்ன இருக்கின்றது..?? என நீங்கள் நினைத்துக்கொண்டால், அது தவறு.
இந்த புது அனுபவத்தை ட்ரை செய்து பாருங்கள்...!!
Citroën நிறுவனம் தயாரித்திருந்த, நூன்றாண்டுகால 2CV எனும் மகிழுந்தை அவ்வப்போது பரிசுக்குள் கண்டிருபீர்கள்... அதில் தான் பரிசை சுற்றிப்பார்க்க போகின்றோம்.
பரிசுக்குள் பார்ப்பதற்கு இத்தனை இடங்களா என ஆச்சரியபடும் அளவுக்கு இவர்கள் இடங்களை 'பட்டியலிட்டு' வைத்திருக்கின்றார்கள்.
விதவிதமான உங்களுக்கு தேவைபடுமாப்போல் 'பக்கேஜ்' இவர்கள் வைத்துள்ளார்கள். €70 யூரோக்கள் தொடக்கம் €140 யூரோக்கள் வரை இந்த 'பக்கேஜ்'கள் உள்ளன.
ஒரு மணி நேரத்தில், பரிசை சுருக்கமாக சுற்றி காண்பித்து அறிமுகம் செய்து வைப்பார்கள்.
அல்லது, இரண்டு மணிநேரத்தில் மிக முக்கியமான 30 இடங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.
இது தவிர, 3 மணிநேர 'பக்கேஜ்' இல் உங்களுக்கு பரிசில் உள்ள சில இரகசிய இடங்கள், வீதிகள் என மேலும் பல அட்டகாசமான இடங்களை சுற்றி காண்பிப்பார்கள்.
இறுதியாக 5 மணிநேர பக்கேஜ் உள்ளது. பரிசுக்குள் உங்களுக்கு 70 இடங்களை அறிமுகப்படுத்தி வைப்பார்கள். ஒவ்வொரு இடங்கள் குறித்த சுவாரஷ்யமான தகவல்களும், வரலாறுகளும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.
அட.., நல்லா இருக்கே... எங்க.. எப்பிடி.. இது தொடர்பான மேலதிக தகவல்கள் அனைத்தும் நாளை சொல்கிறோம்..!
அதற்கு முன், நீங்கள் சுற்றிப்பார்க்க உள்ள மகிழுந்து குறித்து சில தகவல்கள்.
André Lefèbvre எனும் நபர் வடிவமைத்து, 1948 ஆம் ஆண்டு Citroën நிறுவனம் இந்த மகிழுந்தை தயாரித்திருந்தது.
அப்போது இந்த மகிழுந்து புத்தம் புதிய வடிவில் இருந்ததாலும், பல வசதிகள் (??!) கொண்டிருந்ததாலும், மிகவும் பிரபலமானது. அதுவே பின்நாட்களில் 'க்ளாஸிக்' ஆனது.
வியாபாரம் பிரான்ஸ் தாண்டி தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா... ஏன் 'இலங்கை' வரை சென்றது.
1998 ஆம் ஆண்டே இதன் தயாரிப்பை நிறுத்திவிட்டிருந்தாலும், 20 வருடங்களுக்கு பின்னர் கூட, மகிழுந்துகளுக்கு மதிப்பு குறையவில்லை.
பயணிக்க தயாராகுங்கள்.. நாளை சந்திப்போம்!!