Paristamil Navigation Paristamil advert login

கடற்பயணம்.. 76 அகதிகள் மீட்பு!

கடற்பயணம்.. 76 அகதிகள் மீட்பு!

15 தை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1349


சட்டவிரோத உயிராபத்தான கடற்பயணம் மேற்கொண்டிருந்த 76 அகதிகள் கலே கடற்பிராந்தியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 13, திங்கட்கிழமை இரவு இக்கடற்பயணத்தை பா-து-கலே மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அகதிகள் மேற்கொண்டிருந்தனர். காற்று ஊதக்கூடிய படகு ஒன்றில் குறித்த 76 அகதிகளும் பயணித்திருந்தனர். அகதிகளின் கடற்பயணத்தை பார்த்துவிட்டு Préfecture maritime Manche et mer du Nord ஜொந்தாமினர் தகவல் தெரிவிக்க, அவர்களை சட்டவிரோத கடற்பயணத்தை கண்காணிக்கும் சிறப்பு அமைப்பான Cross Gris-Nez அதிகாரிகள் மீட்டிருந்தனர்.

சென்ற ஆண்டு மிக அதிகமான அகதிகள் கலே மற்றும் நோர் மாவட்டங்களின் கடற்பகுதி வழியாக பிரித்தானியா நோக்கி பயணித்திருந்தனர். அதன் போது 76 அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பலி எண்ணிக்கை அதிகரித்தாலும் அகதிகள் தங்களது பயணங்களை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்