Paristamil Navigation Paristamil advert login

பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! - கருத்துக்கணிப்பு!!

பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! - கருத்துக்கணிப்பு!!

15 தை 2025 புதன் 09:00 | பார்வைகள் : 1791


பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, அரசாங்கத்தின் கொள்ளை விளக்க உரையை நேற்று ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை நிகழ்த்தியிருந்தார். அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், முந்தைய Michel Barnier இன் அரசாங்கம் போன்று பெய்ரூவின் அரசாங்கமும் கவிழ்க்கப்பட்டால் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அதற்கு பெறுப்பேற்று பதவி விலக வேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றில் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

“பெய்ரூவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டுமா?” எனும் கேள்வி இந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. அதற்கு 58% சதவீதமானவர்கள் ‘ஆம்’ (oui) என பதிலளித்துள்ளனர். 41% சதவீதமானவர்கள் ‘இல்லை’ (non) என பதிலளித்துள்ளனர். மீதமான 1% சதவீதமானவர்கள் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை.

பிரெஞ்சு மக்களில் கிட்டத்தட்ட பத்தில் ஆறு பேர் மக்ரோனின் பதவி விலகலை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
 


இந்த கருத்துக்கணிப்பை l’Institut CSA நிறுவனம் CNEWS, Europe 1 மற்றும் JDD ஆகிய ஊடகங்களுக்காக நேற்று ஜனவரி 14 ஆம் திகதி மேற்கொண்டிருந்தது. இதில் இணையம் வழியாக 18 வயது நிரம்பிய 1,000 பேர் பங்கேற்றிருந்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்