பரிசில் நான்காம் ஹென்றி மன்னரின் மனைவி உருவாக்கிய பூங்கா..!!
18 சித்திரை 2018 புதன் 11:30 | பார்வைகள் : 18202
நான்காம் ஹென்றி மன்னன் உயிரிழந்ததன் பின்னர், அவரின் நினைவாக அவரது மனைவி ஒரு பூங்காவினை உருவாக்கினார்.
நான்காம் ஹென்றி மன்னனின் மனைவி Marie de Medici உருவாக்கிய அந்த பூங்கா, பரிசின் 6 ஆம் வட்டாரத்தில் உள்ளது.
அழகான பூச்செடிகளும், மிக நேர்த்தியாக வெட்டப்பட்ட புற்களும் உள்ள இந்த பூங்கா, பரிசில் உள்ள மிக சிறந்த பத்து பூங்காக்கள் பட்டியலுக்குள் உள்ளது.
'பில்ட் அப்'ஐ குறைத்துக்கொண்டு, நேரே விஷயத்துக்கு வருகிறோம். ஆறாம் வட்டாரத்தில் உள்ள JARDIN DU LUXEMBOURG பூங்கா குறித்து தான் நாம் சொல்கின்றோம்.
1612 ஆம் ஆண்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இது LUXEMBOURG கட்டிடத்தின் ஒரு அங்கமாகும்.
புராதனத்தை பறை சாற்றும் பாய்மர கப்பல்கள் வெவ்வேறு நாட்டின் கொடியினை தாங்கி நிற்கும் அழகு, சிறுவர்களுக்கான தனி விளையாட்டுத்திடல், 'பொம்மலாட்ட திரையரங்கு' என பல விஷயங்கள் இங்கு உண்டு.
இந்த LUXEMBOURG கட்டிடம் தற்போது பிரெஞ்சு செனட் மேற்சபையின் வசம் உள்ளது.
மொத்த பரப்பளவு 23 ஹெக்டேயர்கள்.
இதோ, பார்த்துக்கொண்டிருக்க இந்த வசந்தகால விடுமுறை முடிவுக்கு வந்துவிடும்... உங்கள் வீட்டு குழந்தைகளுடன் ஒரு 'திடீர்' விஸிட் அடித்துவிட்டு வாருங்களேன்..!!