Paristamil Navigation Paristamil advert login

மத்திய இஸ்ரேலை குறிவைத்து திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹவுதி

மத்திய இஸ்ரேலை குறிவைத்து திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹவுதி

15 தை 2025 புதன் 06:38 | பார்வைகள் : 510


ஹமாஸ் அமைப்புடனான இஸ்ரேல் போர் தீவிரமடைந்து இஸ்ரேலுக்கு எதிராக பல அமைப்புகளும், கிளர்ச்சியாளர்களும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

14-01-2025 அன்று ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்திடீரென மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான மறைவிடத்திற்கு ஓடினர்.

இதற்கிடையே ஏவுகணையை தடுத்து அழிக்கும் பாதுகாப்பு சிஸ்டம் மூலமாக ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 

இந்த ஏவுகணை இஸ்ரேல் எல்லைக்குள் நுழைவதற்குள் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஏமனின் தலைநகரான சானாவை 2014-ல் இருந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், சுமார் 100 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்