பிரான்சுவா பெய்ரூ அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை.. முழு தகவல்கள்!
15 தை 2025 புதன் 07:02 | பார்வைகள் : 6344
ஜனவரி 14 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ பாராளுமன்றத்தில் தனது கொள்கை விளக்க உரையினை ஆற்றினார். பல்வேறு விடயங்கள் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஓய்வூதியம்!
வரவுசெலவுத்திட்டத்தின் போது வெகுவாக ஆராயப்பட்ட ஓய்வூதியம் தொடர்பில் பிரதமர் சில தகவல்களை வெளியிட்டார்.
அதில் ஓய்வூதிய வயது வரம்பு எல்லையை மாற்றவு, வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவும், நிதி கையாள்வதை சீர் செய்யவும் தாம் உறுதியளிப்பதாக தெரிவித்தார்.
கடன்!
போர் காலத்தின் பின்னர் தற்போது எதிர்கொண்டுள்ள கடன் போன்று எந்த காலத்திலும் இருந்ததில்லை. அதை குறைக்கும் நோக்கம் ஒன்றை அமைத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்டம்!
உடனடியாக வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவது பிரெஞ்சு மக்களுக்கு அவசியமானதாகும் என குறிப்பிட்ட பிரதமர், 2025 ஆம் ஆனடில் உள்நாட்டு உற்பத்தியினை 5.4% சதவீதமாக அமைக்க முன்மொழியப்படும் எனவும் குறிப்பிட்டார்.
குடியேற்றம்!
குடியேற்றம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “கட்டுப்பாடு, ஒழுங்குபடுத்துதல் மற்றும் தேசத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பவர்களின் இருப்பு அவர்களின் நாட்டிற்குத் திரும்புதல்" போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மருத்துவம்!
"சில மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை பட்டியலிடுவதற்கான நடவடிக்கை மீண்டும் செய்யப்படாது” என அவர் தெரிவித்தார். அதேவேளை, சக்கர நாற்காலிக்கான 100% சதவீத உதவித்தொகை வழங்கப்படுவது 2025 ஆம் ஆண்டில் சாத்தியமாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan