அரசாங்கம் மீது மூன்று நம்பிக்கை இல்லா பிரேரணை! நாளை வாக்கெடுப்பு!!
15 தை 2025 புதன் 10:00 | பார்வைகள் : 786
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ நேற்று ஜனவரி 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து பொது கொள்ளை விளக்க உரையை நிகழ்த்தினார். ஓய்வூதியம், அதிக கடன், வரவுசெலவுத் திட்டம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக அவர் பல்வேறு கொள்கைகளை வெளியிட்டார்.
அதை அடுத்து பிரான்சுவா பெய்ரூ அரசாங்கம் மீது insoumis, écologistes மற்றும் communistes ஆகிய மூன்று அரசியல் கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணைகளை (motion de censure) அறிவித்துள்ளன. அதை அடுத்து அதன் விவாதம் ஜனவரி 16, வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் ஆரம்பித்து, மாலை 5.30 மணி அளவில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.
இதனை சட்டமன்ற தலைவர் Yaël Braun-Pivet அறிவித்துள்ளார்.