Paristamil Navigation Paristamil advert login

Louise Michel மெற்றோ! - சில 'அடடா' தகவல்கள்!!

Louise Michel மெற்றோ! - சில 'அடடா' தகவல்கள்!!

15 சித்திரை 2018 ஞாயிறு 15:30 | பார்வைகள் : 19295


பரிசுக்குள் எத்தனையோ மெற்றோ நிலையங்கள் உள்ளன... ஆனால் இந்த Louise Michel மெற்றோ கொஞ்சம் வித்தியாசம். இந்த மெற்றோ நிலையம் குறித்த சில 'அடடா' செய்திகள் இன்று உங்கள் பிரெஞ்சு புதினத்தில்...
 
ஒவ்வொரு மெற்றோ நிலையத்துக்கும் பெயர் வைக்கும் போது வரலாறு தொடர்பான பெயர்களே சூட்டப்பட்டது. புறநகர் பரிசின் வடமேற்கு பகுதியில் உள்ள இந்த ஒரே ஒரே நிலையம் மாத்திரமே பெண்ணின் பெயர் சூட்டப்பட்ட நிலையமாகும். 
 
Louise Michel யார் என்பது குறித்த தனி பிரெஞ்சு புதினம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்போது சுருக்கமாக, அவர் ஒரு பெண் இலக்கியவாதி. எண்ணற்ற பல நூல்களை எழுதி பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் அசாத்திய சாதனை படைத்துள்ளார். 
 
அவர் நினைவாகவே இந்த மெற்றோ நிலையத்துக்கு  இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24, 1937  ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 
 
முன்னதாக இந்த நிலையத்துக்கு Vallier என பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் மே மாதம் 1 ஆம் திகதி 1946 ஆம் ஆண்டு Louise Michel எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
 
தவிர, இந்த மெற்றோ நிலையம் அமைக்கப்பட்டுள்ள நகரத்தின் பெயரும் Louise Michel தான். தவிர, உள்ள மெற்றோ நிலையங்களில் இதுவும் மிக அழகான நிலையமாகும். 
 
ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒருமுறை தொடரூந்து இங்கிருந்து புறப்படுகிறது. 
 
92300 Levallois-Perret எனும் முகவரியில் அமைந்துள்ளது இந்த மெற்றோ, எப்போதாவது இங்கு வர நேர்ந்தால், இந்த தகவல்களை நினைத்துக்கொள்ளுங்கள்...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்