மகளிர் ஆஷஸ் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
15 தை 2025 புதன் 12:34 | பார்வைகள் : 215
மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
மகளிர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜங்சன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 44.3 ஓவரில் 180 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) 60 (74) ஓட்டங்கள் விளாசினார்.
சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளும், அலிஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், லாரென் பெல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 159 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஏமி ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களும், நட் சிவர் பிரண்ட் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
அவுஸ்திரேலியா தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளும், கிம் கார்த் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், அவுஸ்திரேலியா முதல் போட்டியை ஏற்கனவே வென்றிருந்ததால் தொடரைக் கைப்பற்றியது.