மத கஜ ராஜா மொத்த வசூல் இவ்வளவா?
15 தை 2025 புதன் 12:48 | பார்வைகள் : 281
விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மதகஜ ராஜா’ திரைப்படம் 2012 ஆம் ஆண்டில் ரிலீசுக்கு தயாரானது. ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக, படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த படத்தை வெளியிட சுந்தர் சி மற்றும் விஷால் ஆகிய இருவரும் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இருவரும் தனித்தனியாக பிற படங்களில் பணிபுரிய தொடங்கினர். இதனால், இந்த படம் கிட்டத்தட்ட மறக்கப்பட்ட நிலைக்கு சென்றது.
இந்த நிலையில், சமீபத்தில் ’மதகஜ ராஜா’ படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் ஆரம்பமாகின. முடிவாக, பொங்கல் விருந்தாக படம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடத்தில் இது நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, விஷால் மற்றும் சந்தானத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தின.
வரலட்சுமி மற்றும் அஞ்சலியின் கிளாமர் நடிப்பு, சுந்தர் சியின் ஜாலியான இயக்கம், விஜய் ஆண்டனியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த படம் வெளியான மூன்று நாளில் மட்டும் ரூ.12 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் மொத்த பட்ஜெட், 12 ஆண்டுகளுக்கு முன் ரூ.12 கோடி என்ற மூன்று நாளில் பட்ஜெட் தொகை வசூலாக வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.