Paristamil Navigation Paristamil advert login

Gervais Raoul Lufbery - ஒரு போர்விமானியின் கதை!!

Gervais Raoul Lufbery - ஒரு போர்விமானியின் கதை!!

12 சித்திரை 2018 வியாழன் 15:30 | பார்வைகள் : 20471


1917  ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்கா வந்திறங்கிய Raoul, அங்கு போர் விமானியாக மேயர் பதவியில் இணைந்தார். 
 
அமெரிக்காவின் சொந்த தயாரிப்பான Nieuport 28 விமானம் இவரின் 'ஃபேவரிட்' விமானமானது. அந்த விமானம் கிட்டத்தட்ட அவரின் காதலியாகவே மாறிப்போனது. 
 
பல்வேறு அதிரடி தாக்குதல்களை   இந்த விமானம் மூலம் அரங்கேற்றினார். இவர், மொத்தமாக ஒற்றை ஆளாக 16 தனிநபர் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அமெரிக்க வரலாறு என்பதால், அதை விட்டுவிடலாம்.
 
மே மாதம் 19 ஆம் திகதி, 1918, மிக உக்கிரமான தாக்குதலை ஜெர்மானிய படைகளுக்கு எதிராக நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஜெர்மன் படையினரின் விமானதளத்தை Raoul நெருங்கிக்கொண்டிருந்தார். 
 
600 மீட்டர்கள் உயரத்தில் பறந்துகொண்டிருந்த Raoul இன் Nieuport 28 விமானத்தை நோக்கி ஜெர்மன் வீரர்கள் சுட்டார்கள். விமானம் தீ பற்றிக்கொண்டது. 
 
Nieuport விமானம் வெடித்துச் சிதறுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் Raoul விமானத்தில் இருந்து குதித்தார். உயிரை காப்பாற்றும் நோக்கோடு குதித்த அவருக்கு விதி ஏமாற்றியது. பாராஷூட் திறக்கவில்லை. 
 
அலுமினிய வேலி ஒன்றின் மேல் விழுந்து உயிரிழந்தார். 
 
பிரெஞ்சு தேசமும் அமெரிக்காவும் ஒரு சேர இந்த வீரரின் இழப்புக்கு அஞ்சலி செலுத்தியது. 
 
அமெரிக்காவின் Chantilly நகரில் உள்ள Steven F. Udvar-Hazy Center இல், Raoul இன் மிக பிடித்தமான விமானமான Nieuport 28 இன், எரிபொருள் அளவுகாட்டியை அவர் நினைவாக பார்வைக்கு வைத்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்