பெய்ரூவின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணையை விரும்பாத மக்கள்!!
15 தை 2025 புதன் 16:55 | பார்வைகள் : 567
பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருவதை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
'பிரான்சுவா பெய்ரூ மீதான அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணையை விரும்புகின்றீர்களா?' என கருத்துக்கணிப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 62% சதவீதமானோர் (பத்தில் ஆறுக்கும் அதிகமானோர்) அதனை விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
நாளை வியாழக்கிழமை மாலை பெய்ரூ அரசாங்கம் மீது முதலாவது நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
அதை அடுத்தே இன்று ஜனவரி 15 ஆம் திகதி இந்த கருத்துக்கணிப்பை BMTV தொலைக்காட்சிக்காக Elabe நிறுவனம் மேற்கொண்டிருந்தது.