பிரான்சில் சர்வதேச A.I மாநாடு.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!!
15 தை 2025 புதன் 17:38 | பார்வைகள் : 1622
சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் தலைநகர் பரிசில் வரும் பெப்ரவரி மாதத்தில் இடம்பெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 1,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர்.
பரிஸ் இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியாவுடன் மிக முக்கிய ஒப்பந்தங்களை போட பரிஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, உலகம் முழுவதிலும் இருந்து பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு Tesla மற்றும் Space X நிறுவனர் எலான் மஸ்க்கும் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.