செனட் சபைக்கு €34,000 யூரோக்கள் செலவில் இருக்கைகள்.. தவறுதலாக வாங்கப்பட்டதாக தெரிவிப்பு!!
15 தை 2025 புதன் 17:49 | பார்வைகள் : 1316
செனட் மேற்சபை (Sénat) ஊடக பேச்சாளர் ஒருவர் வாங்கிய €34,000 யூரோக்கள் பெறுமதியான இருக்கைகள் கடந்தவாரத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரெஞ்சு மக்கள் வாங்கும் திறனற்று இதுக்கும் நிலையில், இரு கதிரைகளை €34,000 யூரோக்கள் செலவில் வாங்கப்பட்டமையே இந்த சர்ச்சைக்குரிய காரணமாகும்.
இந்நிலையில், குறித்த இருக்கைகளை செனட் பேச்சாளர் Gérard Larcher வாங்கியிருந்தார். அதற்கான தொகை செனட் மேற்சபை செலவீனங்களுக்குள் பொருந்தும். இந்நிலையில், இருக்கைகளை தெரிவு செய்வதில் 'தவறிழைத்து விட்டேன்!' என அவர் இன்று காலை தெரிவித்தார்.
'இத்தனை பெறுமதியான இருக்கைகளை நான் தேர்ந்தெடுப்பவரில்லை. அது தவறுதலாக, நான் சரியாக கவனிக்காமல் பதிவு செய்துவிட்டேன்!' என அவர் குறிப்பிட்டார்.