800,000 பார்வையாளர்களை கடந்த நோர்து-டேம் தேவாலயம்!!
16 தை 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 506
நோர்து-டேம் தேவாலயம் வரலாறு காணாத பார்வையாளர்களை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்துள்ளது. திருத்தப்பணிகளின் பின்னர் டிசம்பர் 16 ஆம் திகதி பொது மக்களுக்காக திறப்பட்ட இத்தேவாலயத்துக்கு இதுவரை 800,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வார ஆரம்பம் முதல் மிகவும் குளிர் நிலவி வருகிறது. மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் நோர்து-டேம் தேவாலய வாசலில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
தினமும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையும், வியாழக்கிழமைகளில் இரவு 10 மணிவரையும் தேவாலயம் திறக்கப்படுகிறது.
அவ்வாறாக இந்த ஒரு மாதத்தில் 800,000 பார்வையாளர்களை நோர்து-டேம் தேவாலயம் சந்தித்துள்ளது.