Paristamil Navigation Paristamil advert login

19.2 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு.. 17 வயது சிறுவன் கைது!

19.2 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு.. 17 வயது சிறுவன் கைது!

16 தை 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 836


Free தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து தகவல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2024, ஒக்டோபர் 21 ஆம் திகதி அன்று Free தளம் ‘ஹக்’ செய்யப்பட்டு அதில் இருந்து 19.2 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன. பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என பல தகவல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், 5.11 மில்லியன் பேரின் “ numéro IBAN" எனப்படும் வங்கி தகவல்களும் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சைஃபர் கிரைம் அதிகாரிகள், Essonne மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவரைக் கைது செய்தனர். ஜனவரி 13, 2025 ஆம் திகதி அன்று குறித்த சிறுவன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த சிறுவன் அத்தகவல்களில் பாதியை விற்று 10,000 யூரோக்கள் பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவன் 2024 ஆம் ஆண்டில் இதேபோன்று ஒரு சைஃபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்