பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி..!!
16 தை 2025 வியாழன் 11:00 | பார்வைகள் : 733
பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டில் இருந்தே இந்த குழந்தை பிறப்பு வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் பிரான்சில் 663,000 குழைந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2% சதவீதம் வீழ்ச்சியாகும். அதுவே 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% சதவீத வீழ்ச்சியாகும்.
கொவிட் 19 பரவல் ஏற்பட்ட 2021 ஆம் ஆண்டு தவிர்த்து, ஏனைய 2011 ஆம் ஆண்டில் இருந்து சென்ற ஆண்டு வரை பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சியடைந்து வருகிறது.
அதேவேளை, பிரெஞ்சு மக்கள் தொகையின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி, 2025 ஆம் ஆண்டின் தரவுப்படி 68.6 மில்லியன் பேர் மக்கள் தொகையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தகவல்களை புள்ளியியல் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான பிரெஞ்சு தேசிய நிறுவனமான INSEE வெளியிட்டுள்ளது.