Paristamil Navigation Paristamil advert login

கெஜ்ரிவாலுக்கு கார், வீடு இல்லை: வேட்புமனுவில் தகவல்

கெஜ்ரிவாலுக்கு கார், வீடு இல்லை: வேட்புமனுவில் தகவல்

16 தை 2025 வியாழன் 05:31 | பார்வைகள் : 309


டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தல் பிப்.,5ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில், புதுடில்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளதாவது,

தனக்கு வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை உட்பட ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. கையிருப்பாக ரூ. 50 ஆயிரம், 2022-23ல் ஆண்டு வருமானம், ரூ.1.67 லட்சத்தில் இருந்து 2023-2024ல் ரூ.7.2 லட்சமாக உயர்ந்துள்ளது. காஜியாபாத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் ஒரு பிளாட் என ரூ.1.73 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்து உள்ளது.

சொந்தமாக கார் தவிர டிபாசிட், தங்கம், வெள்ளி, கேஸ் சர்பிகேட் மிட்சுவல் இன்வஸ்மெண்ட், காப்பீடு போன்றவை கிடையாது. எந்த கிரிமினல் குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்