லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பரிதவித்த 57 பேர் மீட்டது கடலோரக் காவல் படை!

16 தை 2025 வியாழன் 05:37 | பார்வைகள் : 4023
லட்சத்தீவு கவரட்டி அருகே இந்தியப் பெருங்கடலில் படகில் சிக்கித் தவித்த 57 பேரை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஜனவரி 14ம் தேதி நள்ளிரவு 12:15 மணியளவில் கவரட்டியில் இருந்து சுஹேலிபர் தீவுக்கு, மூன்று பணியாளர்கள், பயணிகள் 54 பேர் என மொத்தம் 57 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படகு சென்று சேரவில்லை. படகு பழுதானதால், உரிய இடம் செல்ல முடியாமல் நடுக்கடலில் தவித்தனர்.
இந்த நிலையில், கடலோர காவல்படைக்கு லட்சத்தீவு நிர்வாகத்திடம் இருந்து மொத்தம் 57 பேர் இருந்த படகு காணாமல் போனதாக ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. கடலோர காவல்படை குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கவரட்டி அருகே இந்தியப் பெருங்கடலில் பழுதான படகில் இருந்த 57 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பயணிகளில் 22 பெண்கள், 9 ஆண்கள், 3 கைக்குழந்தைகள் மற்றும் 20 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடலில் உள்ள சுஹெலிபார் தீவு அருகே சென்றபோது படகு பழுதானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1