இந்தியா- இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம் இறுதி கட்டம்
16 தை 2025 வியாழன் 05:39 | பார்வைகள் : 363
இந்தியா - இந்தோனேஷியா இடையேயான பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தப்பம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுடன் இணைந்து பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா வடிவமைத்து வருகிறது. இந்த அதிவேக ஏவுகணை 450 கி.மீ. தொலைக்கு சென்று எதிரி இலக்கை தாக்கும் திறன் பெற்றது.இதனை போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். நம் ராணுவத்தின் முப்டைகளிலும் பிரம்மோஸ் செயல்பாட்டில் உள்ளது.
இதையடுத்து இந்தியா- பிலிப்பைன்ஸ் இடையே 2022-ல் ரூ. 412 கோடியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது.
இந்நிலையில் இந்தியா - இந்தோனேஷியா இடையே 450 மில்லியன் டாலர் மதிப்பில் 'பிரம்மோஸ்' ஏவுகணைகளை வாங்கிட ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இறுதி கட்டத்தை எட்டியது.
இது தொடர்பாக வரும் 26-ம் தேதியன்று டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தோனேஷியா அதிபர் இந்தியா வருகிறார். அப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.