Gervais Raoul Lufbery - ஒரு போர்விமானியின் கதை!!
11 சித்திரை 2018 புதன் 10:30 | பார்வைகள் : 18143
1907 ஆம் ஆண்டு தொடக்கம் 1909 ஆம் ஆண்டு வரை அமெரிக்கவின் இராணுவத்தில் ஒரு சிப்பாயாய் இணைந்து பிலிப்பைனில் இடம்பெற்ற யுத்தத்தில் கலந்து கொள்கிறான். அந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இந்தியாவின் கொல்கொத்தா நகரில் அவன் விமான பயிற்சிகளை பெறுகின்றான். அதன் பின்னர், பிரெஞ்சு கட்டுப்பாட்டுக்குள் இருந்த Fédération indochinoiseக்கு செல்கின்றான்.
அங்கு பிரெஞ்சு இராணுவத்தினரின் போர் விமானங்கள் பழுது பார்க்கும் வேலை அவனுக்கு கிடைக்கிறது.
முதன் முதலாக 1914 ஆம் ஆண்டு அவனுக்கு முறையான போர் விமானத்தினை ஓட்டுவதற்குரிய பயிற்சி கிடைக்கிறது. Escadrille VB 106 எனும் விமானத்தை முதன் முதலாக பயிற்சிக்காக ஓட்டி பழகுகின்றார்.
மீண்டும் யுத்தம் தொடங்க, Raoul, பிரெஞ்சு விமானப்படையில் சேர்கின்றார். தனது அட்டகாசமான திறமையினால் போர் விமானிகளில் மிக முக்கியமான இடத்தை தன்வசம் தக்கவைத்துக்கொள்கிறார்.
இவருக்கு ஆஸ்தான குரு ஒருவர் இருக்கின்றார்... அவர் பெயர் Marc Pourpe. இவர் விமானங்கள் ஓட்டுவதில் அசகாயசூரர். இருவரும் முன்னதாக இந்தியாவின் கொல்கொத்தா நகரில் சந்தித்து பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னரே பிரெஞ்சு யுத்தங்களில் பங்கெடுத்தனர். ஒரு கட்டத்தில் Marc Pourpe உயிரிழக்க, அது Raoul க்கு பேரிழப்பாக போனது.
பின்ன்ர், 1917 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவின் விமான படையில் சேர்கின்றார்.
அங்கு அவர் 'தனி ஒருவ'னாக நிகழ்த்திய சாகசங்கள் எல்லாம் அசாத்தியமானவை..!!
நாளை...!!