◉ உறை குளிர்.. வெள்ளம்.. 31 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
16 தை 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 881
இன்று ஜனவரி 16 ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டின் பல பகுதிகளின் சீரற்ற காலநிலை தொடர்கிறது. தொடர்ச்சியாக குளிர் அதிகரித்துச் செல்வதுடன், பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய வெள்ள அனர்த்தமும் இடம்பெற உள்ளது.
● வெள்ளம்!
Aisne, Ardennes, Aube, Charente, Charente-Maritime, Eure, Eure-et-Loir, Loire-Atlantique, Maine-et-Loire, Marne, Meuse, Oise, Rhône, Sarthe, Seine-Maritime, Seine-et-Marne, Somme மற்றும் Vendée ஆகிய 18 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
● குளிர்!
அதேவேளை, கடும் குளிர் காரணமாக 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ain, Allier, Corrèze, South Corsica, Haute-Corse, Creuse, Isère, Loire, Haute-Loire, Puy-de-Dôme, Pyrénées-Orientales, Rhône மற்றும் Saône-et-Loire ஆகிய மாவட்டங்களுக்கு உறை குளிர் காரணமாக ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக -7℃ வரை குளிர் நிலவும் எனவும் Meteo France அறிவித்துள்ளது.