Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு - இதுவரை இல்லாத அளவு வீச்சி!!

ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு - இதுவரை இல்லாத அளவு வீச்சி!!

16 தை 2025 வியாழன் 10:00 | பார்வைகள் : 696


பிரெஞ்சு அரசியல் தலைவர்களின் பிரபலத்தன்மை (popularité) குறித்து மாதம் தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதுவரை இல்லாத அளவு மிகவும் மோசமான செல்வாக்கு இழப்பினைச் சந்தித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மக்ரோன் 42% சதவீத பிரபலத்தன்மையுடன் இருந்தார். அதில் இருந்து தற்போது வரை தொடர்ச்சியாக அவர் வீழ்ச்சியினையே சந்தித்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் வெறுமனே 21% சதவீத பிரபலத்தன்மையே கொண்டுள்ளார்.

முன்னதாக 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் 32% சதவீத பிரபலத்தன்மையுடன் இருந்த நிலையில், நவம்பரில் அவர் 23% சதவீதத்துக்கு தள்ளப்பட்டார்.



2024 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை பிரதமராக இருந்த கேப்ரியல் அத்தாலின் பிரபலத்தன்மை 37% சதவீதம் தொடக்கம் 40% சதவீதம் வரை பல்வேறு மாதங்களில் பதிவாகியிருந்தது.

மிஷல் பார்னியே பிரதமராக பதவியேற்றபோது, பிரபலத்தன்மை 34% சதவீதமாக இருந்தது.

அதேவேளை, தற்போதைய பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் பிரபலத்தன்மை ஆரம்பத்திலேயே 20% சதவீதமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்