நாள் முழுவதும் தடைப்படும் RER C!
16 தை 2025 வியாழன் 07:17 | பார்வைகள் : 841
இன்று ஜனவரி 16 ஆம் திகதி வியாழக்கிழமை RER C சேவைகள் இரண்டு இடங்களில் தடைப்பட உள்ளன. காலை 6 மணி முதல் இன்று நாள் முடிவு வரை குறித்த சேவைகள் தடைப்பட உள்ளன.
இல் து பிரான்ஸ் பொதுபோக்குவரத்து சபை இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளது. Invalides தொடக்கம் Paris-Austerlitz வரையும், Saint-Quentin-en-Yvelines தொடக்கம் Viroflay-Rive-Gauche வரையும் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
Musée d'Orsay நிலையத்துக்கு அருகே ஏற்பட்ட பழுது காரணமாக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் சற்று நிமிடங்களில் திருத்தப்பணிகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நிலையங்களிடையே நாளை காலையே சேவைகள் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.