Paristamil Navigation Paristamil advert login

போர் நிறுத்த அறிவிப்பின் போதும் காசா மீது கடும் தாக்குதல்

போர்  நிறுத்த அறிவிப்பின் போதும் காசா மீது கடும் தாக்குதல்

16 தை 2025 வியாழன் 08:33 | பார்வைகள் : 470


காசா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல், காசா மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக பொதுமக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இது பயங்கரமான இரவு என அல்ஜசீராவின் செய்தியாளர் அனஸ் அல் ஷெரீவ் எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

கடந்த சில மணித்தியாலங்களில் குண்டுவீச்சின் வேகமும் தீவிரதன்மையும் அதிகரித்துள்ளது.

தியாகிகளினதும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கையும் ஒருபோதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் உடல்கள் உட்பட பல உடல்கள் காணப்படும் தற்காலிக பிரேதஅறையை படம்பிடித்து பதிவிட்டுள்ள அவர்,

ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் நான் யுத்த நிறுத்தம் குறித்து காசா மக்கள் மத்தியில் காணப்பட்ட மகிழ்ச்சியை பதிவு செய்துகொண்டிருந்தேன்.

ஆனால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் வழமை போல படுகொலைகளில் ஈடுபடுகின்றனர்" என அவர் பதிவிட்டுள்ளார்.

வடக்கு காசாவில் உள்ள அல்ஜசீரா செய்தியாளர் ஹொசாம் சபட் உக்கிர தாக்குதல் இடம்பெறுகின்றது. 

கடந்த 2023 ஒக்டோபர் 8 ஆம் திகதி இஸ்ரேலின் உக்கிரதாக்குதல்களின் மத்தியில் கூடாரத்தில் வசித்தது நினைவிற்கு வருகின்றது என பதிவிட்டுள்ளார்.   

எழுத்துரு விளம்பரங்கள்